ஆகஸ்ட் மாதத்தில் மெய்வல்லுனர் போட்டியும், குறிசுடுதல் போட்டியும், நீச்சல் போட்டியும், உள்ளக விளையாட்டுக்களான பற்மின்றன், செஸ், ரேபில் ரெனிஸ், கூடைப்பந்தாட்டம் போன்ற போட்டிகள் நடாத்துவதற்கு ஏற்பாடகியுள்ளது.
--------------------------------------------------------------------------------
மேஜர் ஈழப்பிரியா நினைவாக தற்காப்புக்களையான கராத்தேப் போட்டி இம்முறையும் யூன் மாதததில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------
தமிழீழத்தின் முதன்மை விளையாட்டாக அங்கிகரிக்கப்பட்ட உதைபந்தாட்டப் போட்டிகள் மே மாதத்தில் தமிழர் தாயக மாவட்டங்களுக்கு இடையேயான உதைபந்தாட்டப் போட்டி 14, 17, 20 வயதுக்குட்பட்டவர்களுக்கு நடாத்தப்பட்டவுள்ளது. 20 வயதிற்குட்பட்ட மகளீருக்கான உதைபந்தாட்டப் போட்டியும் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------
முதல் தடவையாக தமிழீழத்தில் உள்ள எட்டு மாவட்டங்களையும் உள்ளடக்கிய பெண்களுக்கான தடகள பெருவிளையாட்டுப் போட்டி 5 மார்ச் 2004 அன்று கிளிநொச்சியில் நடாத்துவதற்கு ஏற்பாடகியுள்ளது.
--------------------------------------------------------------------------------
3வது மாபெரும் தேசியப் பெருவிளையாட்டு விழா தமிழீழ விளையாட்டுத் துறையால் தமிழீழத்தில் உள்ள எட்டு மாவட்டங்களையும் உள்ளடக்கிய மாபெரும் தேசிய பெருவிளையாட்டுப் போட்டி 20 பெப்ரவரி 2004 தொடக்கம் 27 பெப்ரவரி 2004 வரை தமிழீழத்தின் மத்திய இடமான கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ளன.
--------------------------------------------------------------------------------
கிளிநொச்சி மாவட்ட விளையாட்டுத்துறையினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி 15 டிசம்பர் 2003 தொடக்கம் 23 டிசம்பர் 2003 வரை கிளிநொச்சி மத்திய விளையாட்டு மைதானத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடகியுள்ளது.
|